Wednesday, 7 March 2018

பெண்களுக்கான முடிகொட்டுதல்/ FEMALE HAIR LOSS

பெண்களுக்கான முடிகொட்டுதல்/ FEMALE HAIR LOSS

பெண்களின் முடி உதிர்வு பிரச்சனை:

பெண்களுக்கு முடி உதிர்வு என்பது இரண்டு வகையாக உள்ளது.

1. சாதாரணமாக முடி உதிர்தல்.
2. ஹார்மோன் பாதிப்பால் முடி உதிர்தல்.

சாதாரணமாக முடி உதிர்தல்:

காரணம் : சத்து குறைவு, சுத்தமின்மை, பொடுகுத் தொந்தரவு. இவற்றில் சாதாரணமாக பெரும்பாலான பெண்களுக்கு முடி உதிர்வு பிரச்சனை இருக்கும். பொதுவாக இரத்தத்தில் ஹிமோகுளோபின் 13கி அளவு இருக்க வேண்டும். இந்த அளவு மிகவும் குறையும் போது முடி அதிகமாக உதிர ஆரம்பித்து அடர்த்தி குறைந்து எலிவால் போல் ஆகிவிடும்.
சுத்தமின்மையாலும் பொடுகுத் தொந்தரவாலும் முடியின் வேர்க்கால்கள் பாதிப்படைந்து முடி உதிர ஆரம்பிக்கும்.இவர்களுக்கு தினமும் 60 முதல் 80 முடி வரை கொத்து கொத்தாக கூண்டோடு உதிரும்.
அறிகுறிகள்: சத்துகுறைவால் முடியின் அடர்த்தி குறைந்து வேர்களின் ரத்த ஓட்டம் குறைவதால் முடி அதிகமாக உதிர ஆரம்பித்து மிகவும் மெலிதாகி, பின்னல் எலிவால் போல் ஆகும்.

இதுவே Female Baldness ஆக நாட்பட்ட நிலையில் மாறிவிடும் அபாயம் உள்ளது. இதன் அறிகுறிகள் முன் நெற்றி ஏறுதல், நடுவகிடு அகலமாதல், முன்தலையில் மண்டையோடு தெரியும் அளவுக்கு முடி கொட்டுதல் ஆகியனவாகும்.
ஹார்மோன் பாதிப்பினால் வரும் முடி உதிர்வு பிரச்சனை:
காரணங்கள்
1. தைராய்டு ஹார்மோன் பாதிப்பு.
2. PCOD பிரச்சனை
3. ஒழுங்கற்ற மாதவிடாய், உடல்பருமன், அதிக உதிரப்போக்கு. 
அறிகுறிகள்:
தைராய்டு ஹார்மோன் பாதிப்பில் முடி கொத்து கொத்தாக உதிரத் தொடங்கி அடர்த்தி குறைந்து மிகவும் மெலிதாகிறது.
PCOD பிரச்சனையில் ஒழுங்கற்ற மாதவிடாயைத் தொடர்ந்து தேவையற்ற இடத்தில், குறிப்பாக மீசையில் பூனை ரோமம் போல வளர்தல் இவற்றோடு தலைமுடி அதிகமாக உதிர ஆரம்பிக்கும். உடல் பருமன் அதிகரிக்கும்.
தவறு என்ன ?
இரண்டு வகையான முடி உதிர்வு பிரச்சனையிலும் அடிப்படையான காரணத்தை கண்டறிய முற்படுவது இல்லை. விளம்பரங்களை பார்த்து கண்ட கண்ட ஷாம்பு, எண்ணெய்களை வாங்கி மாற்றி மாற்றி பயன்படுத்துவதால் பிரச்சனையை அதிகப்படுத்தும் அவலமே நிகழ்கிறது.
மேலும் பலர் முடி உதிர்வு பிரச்சனையை அலட்சியப்படுத்துவதால் வழுக்கையாகும் அளவுக்கு பாதிக்கப்படுகின்றனர்.
ஹீமோகுளோபின் அளவு இயல்பான நிலைக்கு வரும் வரை தொடர்ந்து மருத்துவம் மேற்கொள்வது இல்லை. ஓரிரு நாட்களிலேயே முடிஉதிர்வு நின்று முடி வளரத் தொடங்கும் என எதிர்பார்த்து ஏமாற்றம் அடைகின்றனர்.
நடுவகிடு அகலம் அதிகரிக்கும் போது அதை மறைக்க பக்கவாட்டில் வகிடு எடுத்து அவர்களே சமாதானப்படுத்தி கொள்கின்றனர். இவ்வாறு கவனக்குறைவாக இருப்பதாலும் அலட்சியபடுத்துவதாலும் 6 முதல் 7 வருடங்களில் பெண்களுக்கும் ஆண்களைப்போல் முன்பக்கம் வழுக்கை விழ ஆரம்பிக்கும்.
DR. HERBAL CARE CENTRE –ல் பெண்களின் முடி உதிர்வுக்கான தீர்வு:
முடி உதிர்வால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஹீமோகுளோபினை அதிகரிக்கும் இரும்புச்சத்துள்ள மூலிகை மருந்துகள், சத்துக்குறைவை நீக்கும் மருந்துகள், PCOD மற்றும் தைராய்டு பாதிப்பை சரி செய்யும் உள்மருந்துகள் முறையாக வழங்கப்படுகிறது.
மேலும் இரவு முழுவதும் தலையில் ஊறவைக்கும் எண்ணெய்கள், ஷாம்புகள், பகலில் தடவும் எண்ணெய்கள் வழங்கப்படுகிறது. இவற்றை மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை மருத்துவரின் அறிவுரைப்படி தொடர்ந்து பயன்படுத்தி வரவேண்டும்.
சமுதாயத்தில் பெண்களுக்கு முடி உதிர்தல், வழுக்கை என்பது மிகப் பெரிய பிரச்சனையாகும். இது ஒரு நோய் நிலை. இதனை முறைப்படி மருத்துவம் மேற்கொள்வதன் மூலமாக முழுவதுமாக சரி செய்ய முடியும். கடைகளில் கிடைக்கும் வெறும் ஷாம்பூ, எண்ணெய்களை மட்டும் வைத்து சத்துக்குறைவு, ஹார்மோன் பாதிப்பால் வரும் முடி உதிர்வை குணமாக்க முடியாது.
எங்களின் டாக்டர் ஹெர்பல் கேர் சென்டர் நிறுவனத்தில் முறையான உள்மற்றும் வெளிமருந்துகளையும், அடிப்படையான காரணங்களை கண்டறிந்து அதற்குரிய முறையான சிகிச்சையையும் வழங்குவதன் மூலமாக பெண்களுக்கு ஏற்படும் முடி உதிர்வு பிரச்சனையை நிரந்தரமாக சரி செய்ய முடியும்.

No comments:

Post a Comment

முடி உதிர்வின் காரணம் என்ன? என்ன செய்வது ??Hair fall reasons and Remedies

முடி உதிர்வின் காரணம் என்ன? என்ன செய்வது ??Hair fall reasons  and Remedies