டாக்டர்.பா.மாரிராஜ்,BSMS.MD (சித்தா). இவர் சித்த மருத்துவ இளநிலை படிப்பை 1998-ல் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் முடித்தவர். தொடர்ந்து 19 வருடகாலமாக சித்த மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
மாணவ பருவத்திலேயே மூலிகைகள் குறித்த அறிவை வளர்த்து கொள்வதற்காக பற்பல மலைபயணங்களை மேற்கொண்டவர், மேற்குத்தொடர்ச்சி மலைகளில் மூலிகைகளை தேடி குழுவாக பலமுறை பயணம் செய்தவர்.
படிக்கும் காலத்தில் “உலகத் தமிழ் மருத்துவ கழகம்” என்ற பட்டதாரிகள் அமைப்போடு இணைந்து பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.உண்மையுடன் செயல்படும் பாரம்பரிய மருத்துவர்களை சந்தித்து அவர்கள் மூலம் பல வகுப்புகளை நடத்தி காட்டியுள்ளார். மக்கள் பயனுறும் வகையில் பலமுறை மூலிகை கண்காட்சி நடத்தியுள்ளார்.
உலகத்தமிழ் மருத்துவ கழகத்தால் நடத்தப்படும் இதழான “கற்ப அவிழ்தம்” என்ற மாத இதழின் பொறுப்பாசிரியராக பணியாற்றிய மருத்துவர், இதழில் சித்த மருத்துவம் குறித்து பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.
படித்து முடித்தவுடன் உடனடியாக SKM அறக்கட்டளை விரும்பி அழைத்ததன் பேரில் ஈரோட்டில் தன் மருத்துவ பணியினை துவக்கிய மருத்துவர், தொடர்ந்து SKM அறக்கட்டளையும் உலக சமுதாய சேவா சங்கமும் இணைந்து நடத்திய பொள்ளாச்சி மகரிஷி மருத்துவ மனையில் முன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். மருத்துவமனை துவக்கிய முதல் ஆறுமாத காலத்திலேயே பல்லாயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளித்து அருள்நிதி SKM மயிலானந்தன் அவர்களின் பாராட்டுதலைப்பெற்றவர். மகரிஷி மருத்துவமனையை முன்னுதாரணமாகக் கொண்டு பலகிளைகளை தொடங்கிட முன்மாதிரியாக திகழ்ந்தார்.
இதனை தொடர்ந்து தனது மேல் படிப்பிற்காக சென்ற அவர் முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் காலத்தில் “சித்தர் திருவிழா” எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை பார்வையிடச் செய்து பெருமைக்குரியவரானார்.
“மூலிகை முதலுதவி” என்ற கோட்பாட்டை உருவாக்கி சிற்சில சாதாரண நோய்களுக்கு பக்கவிளைவுகள் உடைய ஆங்கில மருத்துவத்தை தவிர்த்து எளிய மூலிகை மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியும் என்ற கொள்கையை பரப்பி வருபவர்.
பொள்ளாச்சி மற்றும் திருப்பூரில் பல ஆண்டுகளாக சித்த மருத்துவமனைகளை தொடங்கி நடத்தி வருகிறார் டாக்டர் பா.மாரிராஜ் மேலும் கோவையில் டாக்டர் ஹெர்பல் கேர் சென்டர் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு பக்கவிளைவுகள் இல்லாத மூலிகை மருந்துகள் மூலம் சிகிச்சை அளித்து வருகிறார்.
டாக்டர் ஹெர்பல் கேர் சென்டர் நிறுவனத்தை பற்றி:-
தற்காலத்தில் மருத்துவமனைகள் பெருகிவிட்டன, ஆனால் அதற்கேற்ப நோய்களின் எண்ணிக்கை மற்றும் நோயாளிகளின் எண்ணிக்கை குறையவில்லை, மருத்துவ அறிவியல் மென் மேலும் வளர்ச்சியடைந்தாலும், உடனடி நோய்களுக்கு அவசர சிகிச்சை இருந்தாலும், நாள்பட்ட நோய்களுக்கு பக்கவிளைவுகள் இல்லாத மருந்துகள் என்பது நவீன மருத்துவத்தில் இல்லை.
இதனால் மக்கள் பாரம்பரிய மூலிகை மருத்துவத்தை நாடிவருகின்றனர். ஆனால் சரியான மருத்துவரை நாடுகிறார்களா என்றால் இல்லை, மக்களின் அந்த குறையை போக்கும் வகையில் பட்டதாரி மருத்துவர்களுடன் இணைந்து டாக்டர் பா.மாரிராஜ் தலைமையில் டாக்டர் ஹெர்பல் கேர் சென்டர் நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் முக்கிய நோக்கம் “நாட்பட்ட நோய்களுக்கு பக்கவிளைவுகள் இல்லாத நிரந்தர தீர்வு” என்பதே ஆகும்.
நாட்பட்ட நோய்களில் முடி மற்றும் தோல் பிரச்சினை மிக முக்கிய மானதாகும். தோல் மற்றும் முடி பிரச்சினைகளுக்கு மக்கள் மார்க்கெட்டுகளில் கிடைக்கும் நவீன மருந்துகளை வாங்கி திரும்ப திரும்ப உட்கொண்டு உரியதீர்வு கிடைக்காமல் நிரந்தர நோயாளியாக மாறிவரும் அவலமே உள்ளது. மக்களின் இந்த அவல நிலைக்கு நிரந்தர தீர்வளிக்கும் வகையில் “டாக்டர் ஹெர்பல் கேர் சென்டர்” செயல்பட்டு வருகிறது.
இத்தகைய நோய்களுக்கு நிரந்தர தீர்வளிக்கும் வகையில், நம்முடைய பாரம்பரிய அறிவியலை, நவீன மூலிகை அறிவியலோடு இணைத்து மருந்துகளை உருவாக்கி ஆயிரக்கணக்கில் நோயாளிகளின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வளித்துள்ளது. “டாக்டர் ஹெர்பல் கேர் சென்டர்”.
தற்போது தோல் மற்றும் முடி பிரச்சனை உள்ளவர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைத்திடும் வகையில் மருந்துகளை இணைய வழியில் அனைவருக்கும் எளிதில் கிடைத்திடும் வகையில், தங்களின் இல்லத்திற்கே கொண்டு சேர்க்கும் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது, எங்கள் “டாக்டர் ஹெர்பல் கேர் சென்டர்” நிறுவனம்.
No comments:
Post a Comment