Wednesday, 7 March 2018

பெண்களுக்கான முடிகொட்டுதல்/ FEMALE HAIR LOSS

பெண்களுக்கான முடிகொட்டுதல்/ FEMALE HAIR LOSS

பெண்களின் முடி உதிர்வு பிரச்சனை:

பெண்களுக்கு முடி உதிர்வு என்பது இரண்டு வகையாக உள்ளது.

1. சாதாரணமாக முடி உதிர்தல்.
2. ஹார்மோன் பாதிப்பால் முடி உதிர்தல்.

சாதாரணமாக முடி உதிர்தல்:

காரணம் : சத்து குறைவு, சுத்தமின்மை, பொடுகுத் தொந்தரவு. இவற்றில் சாதாரணமாக பெரும்பாலான பெண்களுக்கு முடி உதிர்வு பிரச்சனை இருக்கும். பொதுவாக இரத்தத்தில் ஹிமோகுளோபின் 13கி அளவு இருக்க வேண்டும். இந்த அளவு மிகவும் குறையும் போது முடி அதிகமாக உதிர ஆரம்பித்து அடர்த்தி குறைந்து எலிவால் போல் ஆகிவிடும்.
சுத்தமின்மையாலும் பொடுகுத் தொந்தரவாலும் முடியின் வேர்க்கால்கள் பாதிப்படைந்து முடி உதிர ஆரம்பிக்கும்.இவர்களுக்கு தினமும் 60 முதல் 80 முடி வரை கொத்து கொத்தாக கூண்டோடு உதிரும்.
அறிகுறிகள்: சத்துகுறைவால் முடியின் அடர்த்தி குறைந்து வேர்களின் ரத்த ஓட்டம் குறைவதால் முடி அதிகமாக உதிர ஆரம்பித்து மிகவும் மெலிதாகி, பின்னல் எலிவால் போல் ஆகும்.

இதுவே Female Baldness ஆக நாட்பட்ட நிலையில் மாறிவிடும் அபாயம் உள்ளது. இதன் அறிகுறிகள் முன் நெற்றி ஏறுதல், நடுவகிடு அகலமாதல், முன்தலையில் மண்டையோடு தெரியும் அளவுக்கு முடி கொட்டுதல் ஆகியனவாகும்.
ஹார்மோன் பாதிப்பினால் வரும் முடி உதிர்வு பிரச்சனை:
காரணங்கள்
1. தைராய்டு ஹார்மோன் பாதிப்பு.
2. PCOD பிரச்சனை
3. ஒழுங்கற்ற மாதவிடாய், உடல்பருமன், அதிக உதிரப்போக்கு. 
அறிகுறிகள்:
தைராய்டு ஹார்மோன் பாதிப்பில் முடி கொத்து கொத்தாக உதிரத் தொடங்கி அடர்த்தி குறைந்து மிகவும் மெலிதாகிறது.
PCOD பிரச்சனையில் ஒழுங்கற்ற மாதவிடாயைத் தொடர்ந்து தேவையற்ற இடத்தில், குறிப்பாக மீசையில் பூனை ரோமம் போல வளர்தல் இவற்றோடு தலைமுடி அதிகமாக உதிர ஆரம்பிக்கும். உடல் பருமன் அதிகரிக்கும்.
தவறு என்ன ?
இரண்டு வகையான முடி உதிர்வு பிரச்சனையிலும் அடிப்படையான காரணத்தை கண்டறிய முற்படுவது இல்லை. விளம்பரங்களை பார்த்து கண்ட கண்ட ஷாம்பு, எண்ணெய்களை வாங்கி மாற்றி மாற்றி பயன்படுத்துவதால் பிரச்சனையை அதிகப்படுத்தும் அவலமே நிகழ்கிறது.
மேலும் பலர் முடி உதிர்வு பிரச்சனையை அலட்சியப்படுத்துவதால் வழுக்கையாகும் அளவுக்கு பாதிக்கப்படுகின்றனர்.
ஹீமோகுளோபின் அளவு இயல்பான நிலைக்கு வரும் வரை தொடர்ந்து மருத்துவம் மேற்கொள்வது இல்லை. ஓரிரு நாட்களிலேயே முடிஉதிர்வு நின்று முடி வளரத் தொடங்கும் என எதிர்பார்த்து ஏமாற்றம் அடைகின்றனர்.
நடுவகிடு அகலம் அதிகரிக்கும் போது அதை மறைக்க பக்கவாட்டில் வகிடு எடுத்து அவர்களே சமாதானப்படுத்தி கொள்கின்றனர். இவ்வாறு கவனக்குறைவாக இருப்பதாலும் அலட்சியபடுத்துவதாலும் 6 முதல் 7 வருடங்களில் பெண்களுக்கும் ஆண்களைப்போல் முன்பக்கம் வழுக்கை விழ ஆரம்பிக்கும்.
DR. HERBAL CARE CENTRE –ல் பெண்களின் முடி உதிர்வுக்கான தீர்வு:
முடி உதிர்வால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஹீமோகுளோபினை அதிகரிக்கும் இரும்புச்சத்துள்ள மூலிகை மருந்துகள், சத்துக்குறைவை நீக்கும் மருந்துகள், PCOD மற்றும் தைராய்டு பாதிப்பை சரி செய்யும் உள்மருந்துகள் முறையாக வழங்கப்படுகிறது.
மேலும் இரவு முழுவதும் தலையில் ஊறவைக்கும் எண்ணெய்கள், ஷாம்புகள், பகலில் தடவும் எண்ணெய்கள் வழங்கப்படுகிறது. இவற்றை மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை மருத்துவரின் அறிவுரைப்படி தொடர்ந்து பயன்படுத்தி வரவேண்டும்.
சமுதாயத்தில் பெண்களுக்கு முடி உதிர்தல், வழுக்கை என்பது மிகப் பெரிய பிரச்சனையாகும். இது ஒரு நோய் நிலை. இதனை முறைப்படி மருத்துவம் மேற்கொள்வதன் மூலமாக முழுவதுமாக சரி செய்ய முடியும். கடைகளில் கிடைக்கும் வெறும் ஷாம்பூ, எண்ணெய்களை மட்டும் வைத்து சத்துக்குறைவு, ஹார்மோன் பாதிப்பால் வரும் முடி உதிர்வை குணமாக்க முடியாது.
எங்களின் டாக்டர் ஹெர்பல் கேர் சென்டர் நிறுவனத்தில் முறையான உள்மற்றும் வெளிமருந்துகளையும், அடிப்படையான காரணங்களை கண்டறிந்து அதற்குரிய முறையான சிகிச்சையையும் வழங்குவதன் மூலமாக பெண்களுக்கு ஏற்படும் முடி உதிர்வு பிரச்சனையை நிரந்தரமாக சரி செய்ய முடியும்.

ஆண்களுக்கான முடிகொட்டுதல்/ MALE HAIR LOSS

இளம் வயதில் முடிகொட்டுதல் வழுக்கையின் ஆரம்பம் :.


இன்றைய காலகட்டத்தில் இளம் வயதினருக்கு தலையாய பிரச்சனை தலை முடி கொட்டுவதுதான். இன்று எல்லோருக்கும் முடி தொடர்பாக குழப்பமும், அதிருப்தியும், கேள்வியும் இருப்பதை பார்க்கிறோம். முடி என்பது சிலருக்கு பெருமை. பலருக்கோ வாழ்க்கையிலே வழுக்கை என்பது பிரச்சனை.
நமக்கு வயதாவதை எப்படி தடுக்க முடியாதோ அது போல பரம்பரை காரணமாக வரக்கூடிய வழுக்கை தலையை தவிர்க்க முடியாது. ஆனால் முந்தைய தலைமுறைகளில் நாற்பது வயதிற்கு மேல் ஆரம்பித்த வழுக்கை பிரச்சனை, இப்போது 16 அல்லது 18 வயதிலேயே ஆரம்பித்தது ஏன் ? பெரும்பாலும் இளைஞர்களுக்கு இளம் வயதிலேயே நிறைய முடி கொட்ட ஆரம்பித்து விடுகிறது.
முடி உதிர்வு அல்லது முடி மெலிவு பிரச்சனை உள்ளவர்களுக்கு 1௦௦-ல் 8௦ பேருக்கு ஆண்ட்ரோஜெனிக் அலபேஷியா வருகிறது. பரம்பரை காரணமாக வரக்கூடிய ஆண்ட்ரோஜெனிக் அலபேஷியா மற்றும் செயற்கை அழகு சாதன பொருட்களினால் முடியின் ஆயுட்காலம் குறைவது, இவை இரண்டும் இளம் வயது ஆண்களின் வழுக்கைக்கு காரணமாக அமைகிறது.இவ்வாறு ஏற்படும் இளம் வயது ஆண்களின் வழுக்கையை சாதாரணமாக முடி கொட்டுதல் பிரச்சனை தானே என்று அலட்சியம் செய்வதால் அதுவே நிரந்தர வழுக்கையாக உருமாறுகிறது. சீக்கிரமாக இளம் வயதில் வரும் வழுக்கையை, முடி உதிர ஆரம்பிக்கும் போதே கண்டறிந்து மருத்துவம் செய்வதால் வழுக்கை விழாமல் தடுக்கலாம் , தள்ளி போடலாம்.
அறிகுறிகள் என்ன ?

1. முன்னால் மட்டும் தலைமுடி கொட்டி, சிறிது சிறிதாக நெற்றி ஏறிக்கொண்டே போகும்.
2. இதில் பல வகைகள் உண்டு. முன் சொட்டை, நடு சொட்டை, பின் சொட்டை அல்லது முழு சொட்டை என பரம்பரையை பொறுத்து வருகிறது.
3. முக்கியமாக தினமும் 50 அல்லது 100 முடிவரை கொட்டும், பிடித்து இழுத்தால் வேரோடு வரும்.
4. மொட்டை அடித்தாலும், முடி கொட்டும் இடத்தில் முடியின் வளர்ச்சி மிகவும் மெதுவாகவே இருக்கும்.
5. பக்கவாட்டிலும் தலையின் பின்பகுதியிலும் முடி கொட்டுதல் இருக்காது.
6. முடி கொட்டிய இடத்தில் மண்டையோடு வெளிப்படையாகத் தெரியும்.
காரணம் என்ன ?

இளம் வயதில் வழுக்கை எனப்படும் ஆண்டரோஜெனிக் அலபேஷியாவுக்கு காரணம் DTH(Dihydrotestosterone) என்ற ஹார்மோன் ஆகும். இது அளவாக சுரந்தால் முடி சரியாக வளரும். அதிகமாக சுரந்தால் முடி கொட்டும். காரணம் இது முடிக்குழிகளைச் சுருக்கி விடுகிறது, முடியின் வளர்ச்சிப் பருவத்தைக் குறைத்து விடுகிறது. இதனால் வழுக்கை விழுகிறது. ஹார்மோன் பாதிப்பு உள்ளவர்களுக்கு முடியின் வேர்கால்கள் சுருங்கி அதிலிருந்து கிளம்பும் முடியானது மெலிந்து உயிரே இல்லாமல் இருக்கும்.
தலையின் எந்த பகுதியில் முடி உதிர்தல் இருக்கும் என்பதை பரம்பரைதான் முடிவு செய்கிறது. அப்பா,அப்பா வழி தாத்தா அல்லது அம்மா வழி தாத்தா, தாய் மாமா இவர்களுக்கு எந்த பகுதியில் முடி கொட்டி வழுக்கை ஏற்பட்டதோ, அதே பகுதியில் பரம்பரை ஹார்மோன் பாதிப்பால் வழுக்கை ஏற்படுகிறது.
தவறு என்ன ?

100-ல் 80 பேருக்கு இளம் வயதில் ஹார்மோன் பாதிப்பு காரணமாக முடி உதிர்தல்ஆரம்பித்து வழுக்கை விழுகிறது. ஆனால் வழுக்கை விழ ஆரம்பித்துவிட்டது என்று ஒரு சதவீதம் பேருக்கு கூட தெரிவதில்லை.
நவீன மருத்துவத்தில் DHT ஹார்மோன் பாதிப்பை சரி செய்யும் மருந்து உள்ளது. ஆனால் அம்மருந்துகள் ஆண்கள் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரான் சுரப்பை பாதித்து பக்க விளைவு ஏற்படுத்துகிறது. முடி உதிர்வுக்கு சிகிச்சை செய்யப் போய் குழந்தையின்மை வர வாய்ப்புள்ளது.இளம் வயதினருக்குதான் முடி உதிர்தல் அதிகமாக காணப்படுகிறது. ஆனால் மருந்துகள் இளம் வயதினருக்கு ஆண்மைக் குறைவை ஏற்படுத்தும் தன்மையாக உள்ளது.
DHT ஹார்மோன் பாதிப்பை பற்றி தெரியாமல் கண்டதை தலைக்கு தேய்த்து காலம் கடத்துவதால் வழுக்கையை தவிர்க்க முடியாது. ஒரே நாளில் திடீர் என்று வழுக்கை விழுவது இல்லை. பெரும்பாலானோர் வெளியில் தடவும் எண்ணெய் ஷாம்புகளை மாற்றுவதால் சரியாகும் என்று நம்புகிறார்கள். இவ்வளவு எளிதாக குணமானால் இந்தியாவில் இளம் வயதில் வழுக்கையே இருக்கமாட்டார்கள்.
ஆண்டேரோஜெனிக் அலபேஷியா என்னும் இளம் வயதில் ஏற்படும் வழுக்கையை பொறுத்தவரை, வெளியே தடவும் மருந்துகள் எவ்வளவு அவசியமோ அதே அளவுக்கு மூலிகைப் பொருட்களால் செய்யப்பட்ட இயற்கையான மூலிகை சப்ளிமென்ட்களை எடுத்து கொள்வது அவசியமாகும்.
DOCTOR HERBAL CARE CENTRE HAIR CARE KIT:

DHT ஹார்மோனால் பாதிக்கப்பட்ட முடிகளின் வேர்களிலிருந்து DHT ஹார்மோனை அகற்றுவதன் மூலம் முடியின் வேர்க்கால்கள் சுருங்குவது தடுக்கப்படுகிறது. மேலும் உள்ளுக்குள் சாப்பிடும் மூலிகை சப்ளிமென்ட்கள் முடியை அடர்த்தியாக இயற்கையாக வளர செய்கிறது. எங்களுடைய இந்த DHT ஹார்மோனை சரி செய்யும் மூலிகை மருந்துகள், ஆங்கில மருந்துகளைப் போல எந்த பக்கவிளைவுகளும் ஏற்படுத்தாமல் முழுமையாக குணப்படுத்துகிறது.
எந்தப்பகுதியில் தலை முடியின் வேர் பகுதியில் ஹார்மோன் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோ அந்த பகுதியில் இரவு முழுவதும் ஹார்மோன் பாதிப்பை சரிசெய்யக்கூடிய ,தடவக்கூடிய எண்ணெய்கள் மூலமாக முடியின் வேர் பகுதியை பலப்படுத்தி அந்த பகுதியில் இருக்கும் ஹார்மோனை நீக்கி, முடியை அடர்த்தியாக வளரச்செய்கிறது.
உள்மருந்துகள் DHT ஹார்மோன் அதிகமாக சுரப்பதை குறைக்கவும், வெளி மருந்துகள் எந்தப்பகுதியில் ஹார்மோன் முடியின் வேர்க்கால்களை பாதித்து உள்ளதோ அந்த பகுதியில் பாதிப்பை குறைத்து, இருக்கின்ற முடியை காப்பாற்றி மீண்டும் அந்த முடியின் வேர்க்கால்களிலிருந்து முடி இயற்கையாகவே மெலிவின்றி வளர்வதற்கும் உதவி செய்கிறது.
எங்களுடைய மருத்துவத்தில் உள்மருந்து, வெளிமருந்து, மூலிகை ஷாம்பூ மூன்றும் சேர்ந்த சிகிச்சையானது இளம் வயதிலேயே ஹார்மோன் பாதிப்பால் வழுக்கை விழுவதை தடுத்து இருக்கின்ற முடியை பாதுகாக்க பயன்படுகிறது.
எங்களுடைய மருந்துகள் முடியின் வேர்க்கால்கள் சுருங்குவதை தடுத்து உள்ளிருந்து கிளம்பும் முடியையும் அடர்த்தியாக வளர வைக்கும். இளம் வயதில் வழுக்கை என்ற நோய்க்கு காரணமான DHT ஹார்மோன் பாதிப்பை எந்த பக்க விளைவுகளும் இன்றி குணப்படுத்த முடியும்.

பொடுகு (DANDRUFF)

பொடுகு (DANDRUFF)


தலை என்று ஒன்று இருந்தால்அதில் கண்டிப்பாக பொடுகு உண்டு, என்று சொல்லும் அளவுக்கு இன்றைய இளைய தலைமுறைக்கு பொடுகுத் தொல்லை தலையாய பிரச்சினையாக மாறியுள்ளது. இதற்கென கடைகளில் கிடைக்கும் ஷாம்புகளை திரும்ப திரும்ப பயன்படுத்துவதால் குறைவதுபோல் தோன்றி மீண்டும் வருவதுதான் பெரிய பிரச்சினையாக உள்ளது. இது இன்றைய இளைய தலைமுறைக்கு மனரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இவ்வளவு அறிவியல் வளர்ச்சி அடைந்திருந்தாலும், இந்த சாதாரண பொடுகை தீர்க்க முடியாதா? என கேள்வி கேட்கும் நிலையே உள்ளது.

பொடுகு குறித்து ஒரு விளக்கம் :-


நமது தோலில் இறந்த செல்கள் உதிர்ந்து புதிய செல்கள் வளர்வது என்பது இயற்கை. ஆனால் பொடுகு உள்ளவர்க்கு இறந்த செல்கள் அதிகமாக உதிர ஆரம்பித்து அந்த செல்கள் அப்படியே வெண்ணிற திட்டுகளாக மாறி தோலில் படிகிறது. அத்துடன் புதிய செல்கள் உற்பத்தியும் அதிகமாகி தலையில் வெள்ளை படலமாக மாறிவிடும்.

விளக்கம்:-


1) வறட்சியான சருமத்தினால் ஏற்படும் பொடுகு பெரும்பாலும் குளிர்காலத்தில் அதிகமாக வரும்.

2) தலையில், தோலில் சுரக்கும் sebam (செபம்) என்னும் எண்ணெய் சுரப்புகளை முறையாக சுத்தம் செய்யாமல் இருப்பதால் பாதிப்பு வருகிறது.

3) அடுத்து fungal (பூஞ்சை), ஈஸ்ட் போன்ற வெளி கிருமிகள் பாதிப்பாலும் பொடுகு உருவாகும். இந்த பொடுகில் அரிப்பு அதிகமாக இருக்கும்.

4) சொரியாசிஸ் என்ற நோயை பொடுகு என்று குறைவாக கணிப்பதும், பொடுகை சொரியாசிஸ் என்று தவறாக நினைப்பதும் நடக்கிறது. சொரியாசிஸிஸில் தோல் செதில் செதிலாக உதிர்ந்து ஒருவகையான மினுமினுப்புடன் மாவுபோல் காணப்படும்.

குறிகுணங்கள் என்ன?


1. தலையில் மேல் பகுதியில் செதில் செதிலாக தோல் உதிரல் மாவு போல படலமாக காணப்படும்.

2. சிலருக்கு எண்ணெய் பசையுடன் தோல் உதிர்ந்து அடுக்கு படலுத்துடன் காணப்படும்.

3. நகத்தை வைத்து சுரண்டினால் மாவுபோல் நகத்திலும் காணப்படும்.

4. முற்றிய நிலையில் புருவம் நெற்றி காது மடலில் காணப்படும்.

5. Fungal – ஆல் வரும் பொடுகு மிகவும் அரிப்புடன் சுரண்டினால் ரத்தம் வருவதாவும் இருக்கும்.

செய்யும் தவறு என்ன ?


1. தோல் பாதுகாப்பின்மை, முடி பாதுகாப்பின்மை, சுத்தமின்மை ஆகியவை முக்கிய காரணங்கள்.

2. நமது வெப்பநாட்டில் வறட்சியான சருமத்தை, தோலை பாதுகாக்க சில வழிமுறைகளை கூறியுள்ளார்கள்.

3. பொடுகு நவீன மருத்துவத்தில் பூஞ்சை தொற்றாக கூறப்படுகிறது. அதனால் பூஞ்சையை கொல்லும் கெமிக்கல் ஷாம்புகளை மீண்டும் மீண்டும் தொடர்ந்து பயன்படுத்துவதால் பூஞ்சை குறைகிறது. ஆனால் முடி முழுதாக பாதிக்கபடுகிறது.

4. மீண்டும் மீண்டும் கெமிக்கல் ஷாம்புகளை பயன்படுத்துவதால், நமது தோலில் எதிர்ப்புசக்தி குறைந்து பொடுகு நிரந்தர நோயாக மாறிவிடும்.

5. தினமும் ஷாம்புகளை பயன்படுத்துவதால் பலன் ஏற்பட போவது இல்லை.

6. எண்ணெய் தேய்க்கும் பழக்கம் என்பது பொடுகின் போது நமக்கு வருகிறது. கடைகளில் கிடைக்கும் எண்ணெய்களில் உள்ள மினரல் ஆயில் பொடுகுகுக்கு உணவாகி விடும். பொடுகை நிரந்தர நோயாக மாற்றிவிடும்.

செய்ய வேண்டியது :


1. முதலில் சுத்தம்: சுத்தமாகத்தான் உள்ளேன். தினமும் குளிக்கிறேன். என்று சொன்னாலும் பொடுகு திரும்ப திரும்ப வருகிறது.

2. சுத்தம் என்பது நமது சீப்பு, தலையணை உறை, துவட்டும் துண்டு இவற்றிலும் உண்டு. தலையில் உள்ள ஈரத்தையும், வியர்வையும் உடனடியாக துவட்டுவது நல்லது.

3. நமது வெப்ப நாட்டில் எண்ணெய் குளியல், தலைக்கு எண்ணெய் தேய்த்தல் ஆகியவை புற ஊதா கதிர்களிடமிருந்து பாதுகாக்க காலம் காலமாக தொன்று தொட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதை தொடர்ந்து செயல்படுத்தினால் முழுவதும் குணமடைய முடியும்.

4. கெமிக்கல் ஷாம்புகளை திரும்ப திரும்ப பயன்படுத்துவது தவறு.

5. அதனுடன் தேவையான அளவு நீர் அருந்துதல், டென்ஷன், ஸ்ட்ரெஸ் இவற்றை குறைத்தல் போன்றவையும் பொடுகிலிருந்து நிரந்தர தீர்வை அளிக்கும்.

மருத்துவம் என்ன ?


1. பொடுகுக்கான அனைத்து காரணங்களையும் நீக்கும் வகையில் நமது மருத்துவம் செயல்படுகிறது.

2. பொடுகை சுத்தப்படுத்துதல் என்பது கெமிக்கல் அல்லாத ஷாம்புகள் மற்றும் பக்க விளைவுகள் இல்லாத மூலிகை எண்ணெய்கள் வழங்குவதன் மூலம் நிரந்தர தீர்வு அளிக்கபடுகிறது.

3. வறண்ட சருமத்தை போக்கவும், பூஞ்சை கிருமி தொற்றை நீக்கவும் மூலிகைகள் கலந்த இயற்கையில் காய்ச்சப்பட்ட எண்ணெயை தலைக்கு தேய்த்து இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.

4. இரவு முழுவதும் ஊறவைப்பதால் தலையின் இயல்புநிலை திரும்ப பாதுகாக்கப்படும். தலையில் உள்ள கிருமி தொற்று, வறண்ட சருமம் இவற்றை நீக்கி பக்க விளைவு இல்லாமல் பொடுகை நிரந்தரமாக நீக்குகிறது., பொடுகினால் ஏற்படும் முடி உதிர்வை தடுக்கிறது.

5. நமது மூலிகை ஷாம்புவில் Tea Tree ஆயில், கற்றாழை போன்ற மூலிகைகள் கலந்துள்ளதால் முடியை சுத்தப்படுத்தி, வறட்சியான தோலை நீக்கி, பொடுகை மீண்டும் வராமல் செய்கிறது.

6. வாரம் இரண்டு அல்லது மூன்று முறை Dr. Herbal Dandruff Care kit-இல் உள்ள இரவில் தலையில் ஊற வைக்க பயன்படுத்தும் எண்ணெய் மற்றும் மூலிகை ஷாம்புவை பயன்படுத்தி வந்தால் பொடுகு, அதனால் ஏற்படும் அரிப்பு, முடி உதிர்தல் ஆகியவை பக்க விளைவுகள் இல்லாமல் குணமாகும்.

டாக்டர் ஹெர்பல் கேர் சென்டர் நிறுவனத்தின் மருத்துவர் பற்றி .....

டாக்டர்.பா.மாரிராஜ்,BSMS.MD (சித்தா). இவர் சித்த மருத்துவ இளநிலை படிப்பை 1998-ல் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் முடித்தவர். தொடர்ந்து 19 வருடகாலமாக சித்த மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
மாணவ பருவத்திலேயே மூலிகைகள் குறித்த அறிவை வளர்த்து கொள்வதற்காக பற்பல மலைபயணங்களை மேற்கொண்டவர், மேற்குத்தொடர்ச்சி மலைகளில் மூலிகைகளை தேடி குழுவாக பலமுறை பயணம் செய்தவர்.
படிக்கும் காலத்தில் “உலகத் தமிழ் மருத்துவ கழகம்” என்ற பட்டதாரிகள் அமைப்போடு இணைந்து பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.உண்மையுடன் செயல்படும் பாரம்பரிய மருத்துவர்களை சந்தித்து அவர்கள் மூலம் பல வகுப்புகளை நடத்தி காட்டியுள்ளார். மக்கள் பயனுறும் வகையில் பலமுறை மூலிகை கண்காட்சி நடத்தியுள்ளார்.
உலகத்தமிழ் மருத்துவ கழகத்தால் நடத்தப்படும் இதழான “கற்ப அவிழ்தம்” என்ற மாத இதழின் பொறுப்பாசிரியராக பணியாற்றிய மருத்துவர், இதழில் சித்த மருத்துவம் குறித்து பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.
படித்து முடித்தவுடன் உடனடியாக SKM அறக்கட்டளை விரும்பி அழைத்ததன் பேரில் ஈரோட்டில் தன் மருத்துவ பணியினை துவக்கிய மருத்துவர், தொடர்ந்து SKM அறக்கட்டளையும் உலக சமுதாய சேவா சங்கமும் இணைந்து நடத்திய பொள்ளாச்சி மகரிஷி மருத்துவ மனையில் முன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். மருத்துவமனை துவக்கிய முதல் ஆறுமாத காலத்திலேயே பல்லாயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளித்து அருள்நிதி SKM மயிலானந்தன் அவர்களின் பாராட்டுதலைப்பெற்றவர். மகரிஷி மருத்துவமனையை முன்னுதாரணமாகக் கொண்டு பலகிளைகளை தொடங்கிட முன்மாதிரியாக திகழ்ந்தார்.
இதனை தொடர்ந்து தனது மேல் படிப்பிற்காக சென்ற அவர் முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் காலத்தில் “சித்தர் திருவிழா” எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை பார்வையிடச் செய்து பெருமைக்குரியவரானார்.
“மூலிகை முதலுதவி” என்ற கோட்பாட்டை உருவாக்கி சிற்சில சாதாரண நோய்களுக்கு பக்கவிளைவுகள் உடைய ஆங்கில மருத்துவத்தை தவிர்த்து எளிய மூலிகை மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியும் என்ற கொள்கையை பரப்பி வருபவர்.
பொள்ளாச்சி மற்றும் திருப்பூரில் பல ஆண்டுகளாக சித்த மருத்துவமனைகளை தொடங்கி நடத்தி வருகிறார் டாக்டர் பா.மாரிராஜ் மேலும் கோவையில் டாக்டர் ஹெர்பல் கேர் சென்டர் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு பக்கவிளைவுகள் இல்லாத மூலிகை மருந்துகள் மூலம் சிகிச்சை அளித்து வருகிறார்.

டாக்டர் ஹெர்பல் கேர் சென்டர் நிறுவனத்தை பற்றி:-

தற்காலத்தில் மருத்துவமனைகள் பெருகிவிட்டன, ஆனால் அதற்கேற்ப நோய்களின் எண்ணிக்கை மற்றும் நோயாளிகளின் எண்ணிக்கை குறையவில்லை, மருத்துவ அறிவியல் மென் மேலும் வளர்ச்சியடைந்தாலும், உடனடி நோய்களுக்கு அவசர சிகிச்சை இருந்தாலும், நாள்பட்ட நோய்களுக்கு பக்கவிளைவுகள் இல்லாத மருந்துகள் என்பது நவீன மருத்துவத்தில் இல்லை.
இதனால் மக்கள் பாரம்பரிய மூலிகை மருத்துவத்தை நாடிவருகின்றனர். ஆனால் சரியான மருத்துவரை நாடுகிறார்களா என்றால் இல்லை, மக்களின் அந்த குறையை போக்கும் வகையில் பட்டதாரி மருத்துவர்களுடன் இணைந்து டாக்டர் பா.மாரிராஜ் தலைமையில் டாக்டர் ஹெர்பல் கேர் சென்டர் நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் முக்கிய நோக்கம் “நாட்பட்ட நோய்களுக்கு பக்கவிளைவுகள் இல்லாத நிரந்தர தீர்வு” என்பதே ஆகும்.
நாட்பட்ட நோய்களில் முடி மற்றும் தோல் பிரச்சினை மிக முக்கிய மானதாகும். தோல் மற்றும் முடி பிரச்சினைகளுக்கு மக்கள் மார்க்கெட்டுகளில் கிடைக்கும் நவீன மருந்துகளை வாங்கி திரும்ப திரும்ப உட்கொண்டு உரியதீர்வு கிடைக்காமல் நிரந்தர நோயாளியாக மாறிவரும் அவலமே உள்ளது. மக்களின் இந்த அவல நிலைக்கு நிரந்தர தீர்வளிக்கும் வகையில் “டாக்டர் ஹெர்பல் கேர் சென்டர்” செயல்பட்டு வருகிறது.
இத்தகைய நோய்களுக்கு நிரந்தர தீர்வளிக்கும் வகையில், நம்முடைய பாரம்பரிய அறிவியலை, நவீன மூலிகை அறிவியலோடு இணைத்து மருந்துகளை உருவாக்கி ஆயிரக்கணக்கில் நோயாளிகளின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வளித்துள்ளது. “டாக்டர் ஹெர்பல் கேர் சென்டர்”.

தற்போது தோல் மற்றும் முடி பிரச்சனை உள்ளவர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைத்திடும் வகையில் மருந்துகளை இணைய வழியில் அனைவருக்கும் எளிதில் கிடைத்திடும் வகையில், தங்களின் இல்லத்திற்கே கொண்டு சேர்க்கும் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது, எங்கள் “டாக்டர் ஹெர்பல் கேர் சென்டர்” நிறுவனம்.

முடி உதிர்வின் காரணம் என்ன? என்ன செய்வது ??Hair fall reasons and Remedies

முடி உதிர்வின் காரணம் என்ன? என்ன செய்வது ??Hair fall reasons  and Remedies