இன்றைய காலகட்டத்தில் இளம் வயதினருக்கு தலையாய பிரச்சனை தலை முடி கொட்டுவதுதான். இன்று எல்லோருக்கும் முடி தொடர்பாக குழப்பமும், அதிருப்தியும், கேள்வியும் இருப்பதை பார்க்கிறோம். முடி என்பது சிலருக்கு பெருமை. பலருக்கோ வாழ்க்கையிலே வழுக்கை என்பது பிரச்சனை.
நமக்கு வயதாவதை எப்படி தடுக்க முடியாதோ அது போல பரம்பரை காரணமாக வரக்கூடிய வழுக்கை தலையை தவிர்க்க முடியாது. ஆனால் முந்தைய தலைமுறைகளில் நாற்பது வயதிற்கு மேல் ஆரம்பித்த வழுக்கை பிரச்சனை, இப்போது 16 அல்லது 18 வயதிலேயே ஆரம்பித்தது ஏன் ? பெரும்பாலும் இளைஞர்களுக்கு இளம் வயதிலேயே நிறைய முடி கொட்ட ஆரம்பித்து விடுகிறது.
முடி உதிர்வு அல்லது முடி மெலிவு பிரச்சனை உள்ளவர்களுக்கு 1௦௦-ல் 8௦ பேருக்கு ஆண்ட்ரோஜெனிக் அலபேஷியா வருகிறது. பரம்பரை காரணமாக வரக்கூடிய ஆண்ட்ரோஜெனிக் அலபேஷியா மற்றும் செயற்கை அழகு சாதன பொருட்களினால் முடியின் ஆயுட்காலம் குறைவது, இவை இரண்டும் இளம் வயது ஆண்களின் வழுக்கைக்கு காரணமாக அமைகிறது.இவ்வாறு ஏற்படும் இளம் வயது ஆண்களின் வழுக்கையை சாதாரணமாக முடி கொட்டுதல் பிரச்சனை தானே என்று அலட்சியம் செய்வதால் அதுவே நிரந்தர வழுக்கையாக உருமாறுகிறது. சீக்கிரமாக இளம் வயதில் வரும் வழுக்கையை, முடி உதிர ஆரம்பிக்கும் போதே கண்டறிந்து மருத்துவம் செய்வதால் வழுக்கை விழாமல் தடுக்கலாம் , தள்ளி போடலாம்.
அறிகுறிகள் என்ன ?
1. முன்னால் மட்டும் தலைமுடி கொட்டி, சிறிது சிறிதாக நெற்றி ஏறிக்கொண்டே போகும்.
2. இதில் பல வகைகள் உண்டு. முன் சொட்டை, நடு சொட்டை, பின் சொட்டை அல்லது முழு சொட்டை என பரம்பரையை பொறுத்து வருகிறது.
3. முக்கியமாக தினமும் 50 அல்லது 100 முடிவரை கொட்டும், பிடித்து இழுத்தால் வேரோடு வரும்.
4. மொட்டை அடித்தாலும், முடி கொட்டும் இடத்தில் முடியின் வளர்ச்சி மிகவும் மெதுவாகவே இருக்கும்.
5. பக்கவாட்டிலும் தலையின் பின்பகுதியிலும் முடி கொட்டுதல் இருக்காது.
6. முடி கொட்டிய இடத்தில் மண்டையோடு வெளிப்படையாகத் தெரியும்.
காரணம் என்ன ?
இளம் வயதில் வழுக்கை எனப்படும் ஆண்டரோஜெனிக் அலபேஷியாவுக்கு காரணம் DTH(Dihydrotestosterone) என்ற ஹார்மோன் ஆகும். இது அளவாக சுரந்தால் முடி சரியாக வளரும். அதிகமாக சுரந்தால் முடி கொட்டும். காரணம் இது முடிக்குழிகளைச் சுருக்கி விடுகிறது, முடியின் வளர்ச்சிப் பருவத்தைக் குறைத்து விடுகிறது. இதனால் வழுக்கை விழுகிறது. ஹார்மோன் பாதிப்பு உள்ளவர்களுக்கு முடியின் வேர்கால்கள் சுருங்கி அதிலிருந்து கிளம்பும் முடியானது மெலிந்து உயிரே இல்லாமல் இருக்கும்.
தலையின் எந்த பகுதியில் முடி உதிர்தல் இருக்கும் என்பதை பரம்பரைதான் முடிவு செய்கிறது. அப்பா,அப்பா வழி தாத்தா அல்லது அம்மா வழி தாத்தா, தாய் மாமா இவர்களுக்கு எந்த பகுதியில் முடி கொட்டி வழுக்கை ஏற்பட்டதோ, அதே பகுதியில் பரம்பரை ஹார்மோன் பாதிப்பால் வழுக்கை ஏற்படுகிறது.
தவறு என்ன ?
100-ல் 80 பேருக்கு இளம் வயதில் ஹார்மோன் பாதிப்பு காரணமாக முடி உதிர்தல்ஆரம்பித்து வழுக்கை விழுகிறது. ஆனால் வழுக்கை விழ ஆரம்பித்துவிட்டது என்று ஒரு சதவீதம் பேருக்கு கூட தெரிவதில்லை.
நவீன மருத்துவத்தில் DHT ஹார்மோன் பாதிப்பை சரி செய்யும் மருந்து உள்ளது. ஆனால் அம்மருந்துகள் ஆண்கள் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரான் சுரப்பை பாதித்து பக்க விளைவு ஏற்படுத்துகிறது. முடி உதிர்வுக்கு சிகிச்சை செய்யப் போய் குழந்தையின்மை வர வாய்ப்புள்ளது.இளம் வயதினருக்குதான் முடி உதிர்தல் அதிகமாக காணப்படுகிறது. ஆனால் மருந்துகள் இளம் வயதினருக்கு ஆண்மைக் குறைவை ஏற்படுத்தும் தன்மையாக உள்ளது.
DHT ஹார்மோன் பாதிப்பை பற்றி தெரியாமல் கண்டதை தலைக்கு தேய்த்து காலம் கடத்துவதால் வழுக்கையை தவிர்க்க முடியாது. ஒரே நாளில் திடீர் என்று வழுக்கை விழுவது இல்லை. பெரும்பாலானோர் வெளியில் தடவும் எண்ணெய் ஷாம்புகளை மாற்றுவதால் சரியாகும் என்று நம்புகிறார்கள். இவ்வளவு எளிதாக குணமானால் இந்தியாவில் இளம் வயதில் வழுக்கையே இருக்கமாட்டார்கள்.
ஆண்டேரோஜெனிக் அலபேஷியா என்னும் இளம் வயதில் ஏற்படும் வழுக்கையை பொறுத்தவரை, வெளியே தடவும் மருந்துகள் எவ்வளவு அவசியமோ அதே அளவுக்கு மூலிகைப் பொருட்களால் செய்யப்பட்ட இயற்கையான மூலிகை சப்ளிமென்ட்களை எடுத்து கொள்வது அவசியமாகும்.
DOCTOR HERBAL CARE CENTRE HAIR CARE KIT:
DHT ஹார்மோனால் பாதிக்கப்பட்ட முடிகளின் வேர்களிலிருந்து DHT ஹார்மோனை அகற்றுவதன் மூலம் முடியின் வேர்க்கால்கள் சுருங்குவது தடுக்கப்படுகிறது. மேலும் உள்ளுக்குள் சாப்பிடும் மூலிகை சப்ளிமென்ட்கள் முடியை அடர்த்தியாக இயற்கையாக வளர செய்கிறது. எங்களுடைய இந்த DHT ஹார்மோனை சரி செய்யும் மூலிகை மருந்துகள், ஆங்கில மருந்துகளைப் போல எந்த பக்கவிளைவுகளும் ஏற்படுத்தாமல் முழுமையாக குணப்படுத்துகிறது.
எந்தப்பகுதியில் தலை முடியின் வேர் பகுதியில் ஹார்மோன் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோ அந்த பகுதியில் இரவு முழுவதும் ஹார்மோன் பாதிப்பை சரிசெய்யக்கூடிய ,தடவக்கூடிய எண்ணெய்கள் மூலமாக முடியின் வேர் பகுதியை பலப்படுத்தி அந்த பகுதியில் இருக்கும் ஹார்மோனை நீக்கி, முடியை அடர்த்தியாக வளரச்செய்கிறது.
உள்மருந்துகள் DHT ஹார்மோன் அதிகமாக சுரப்பதை குறைக்கவும், வெளி மருந்துகள் எந்தப்பகுதியில் ஹார்மோன் முடியின் வேர்க்கால்களை பாதித்து உள்ளதோ அந்த பகுதியில் பாதிப்பை குறைத்து, இருக்கின்ற முடியை காப்பாற்றி மீண்டும் அந்த முடியின் வேர்க்கால்களிலிருந்து முடி இயற்கையாகவே மெலிவின்றி வளர்வதற்கும் உதவி செய்கிறது.
எங்களுடைய மருத்துவத்தில் உள்மருந்து, வெளிமருந்து, மூலிகை ஷாம்பூ மூன்றும் சேர்ந்த சிகிச்சையானது இளம் வயதிலேயே ஹார்மோன் பாதிப்பால் வழுக்கை விழுவதை தடுத்து இருக்கின்ற முடியை பாதுகாக்க பயன்படுகிறது.
எங்களுடைய மருந்துகள் முடியின் வேர்க்கால்கள் சுருங்குவதை தடுத்து உள்ளிருந்து கிளம்பும் முடியையும் அடர்த்தியாக வளர வைக்கும். இளம் வயதில் வழுக்கை என்ற நோய்க்கு காரணமான DHT ஹார்மோன் பாதிப்பை எந்த பக்க விளைவுகளும் இன்றி குணப்படுத்த முடியும்.